ஆச்சி மசாலா நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இயற்கை விவசாய முறையில்மிளகாயை சாகுபடி செய்து, நாட்டுக்கு அபரிமிதமான பலன்கள்கிடைக்கச் செய்வதை ‘சிவப்பு புரட்சி’ என்கிறோம்.
ஆச்சி உணவுக் குழுமத் தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக், ‘நல்லக்கீரை’ ஜெகன் ஆகியோர் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆச்சி நிறுவனம்‘உணவே மருந்து' என்ற கொள்கையுடன், சிறந்த விவசாயிகளிடமிருந்து நன்கு விளைந்த மிளகாய்,தனியா, மஞ்சள் போன்றவற்றை வாங்கி, மசாலாப் பொருட்களை தயாரித்து மக்களுக்கு விநியோ கித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.காம். பட்டதாரியான ‘நல்லக்கீரை’ ஜெகன், இயற்கை வேளாண் முறையில் 45 வகையான கீரைகளை விளைவித்து, ‘நல்லக்கீரை’ என்ற பிராண்டில் விற்பனை செய்துவருகிறார். இவர்கள் இருவரும் ‘சிவப்பு புரட்சி’க்காக கைகோர்த்துள்ளனர்.
இதுகுறித்து நல்லக்கீரை ஜெகன் கூறும்போது, “நெல் பயிரால் விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே லாபம் கிடைக்கும். அதேசமயம், மிளகாய் பயிரால் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆச்சி மசாலா நிறுவனம், நிலத்தின் மண்ணை ஆராய்ந்து,வழிகாட்டுகிறது. சிறந்த மிளகாய் நாற்றுகளை வழங்குகிறது. உரம், பூச்சி, நீர் மேலாண்மையைக் கற்றுத்தந்து, செலவைக் குறைக்கிறது.குறைந்தபட்ச ஆதரவு விலையைநிர்ணயித்து, சந்தை விலைக்கேகொள்முதல் செய்கிறது. பயிர்க் கடன் கிடைக்கவும் வழிகாட்டுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,000 ஏக்கரில் மிளகாய் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், நெல்லை மாவட்ட விவசாயிகள் விரைவில் இத்திட்டத்தில் சேருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. l
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago