தமிழகத்தில் புதிதாக 1,956 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 1,956 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஆண்கள்1,083, பெண்கள் 873 என மொத்தம் 1,956 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 241, சென்னையில் 187, ஈரோட்டில் 185, செங்கல்பட்டில் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 75,30-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 25 லட்சத்து 20,584 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,807 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். தமிழகம் முழுவதும் 20,407 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 28 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,317-ஆக உயர்ந்துள் ளது. சென்னையில் மட்டும் 8,338 பேர் இறந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்