முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் - எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 55 சதவீதம் அதிகரிப்பு : ஊழல் தடுப்பு போலீஸார் தகவல்

By செய்திப்பிரிவு

கடந்த அதிமுக ஆட்சியில் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சென்னை, கரூர் வீடுகள், கரூரில் உள்ள அவரது தம்பி, உறவினர்கள், உதவியாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் ஜூலை 22-ம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.

அதில் முதலீடுகள், பரிவர்த்தனைகள், சொத்துகள் குறித்த முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.25.56 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு தெரிவித்தது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, "திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் முதல்கட்டம்தான் இந்த சோதனை. சட்டப்படி எதிர்கொள்வோம். கைப்பற்றப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்கள் உள்ளன. சம்மன் அனுப்பும்போது ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்பப் பெறுவோம்" என்றார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, தம்பி சேகர் ஆகியோர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் தாமாக முன்வந்து (சுமோட்டாவாக) ஜூலை 21-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்