சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் - தகுதி குறைவான பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் : உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தகுதி குறைவான பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பனுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் பொன்முடி கூறியதாவது: ஜெயலலிதாபல்கலைக்கழகம் எங்கே இருக்கிறது? அது பெயரளவில்தான் உள்ளது. ‘ஜெயலலிதா பல்கலைக்கழகம்’ என அறிவித்தார்கள். அவ்வளவுதான். அதை தொடங்கி வைத்தார்கள் என்று சொல்ல முடியாது. பெயர் வைப்பது அதிமுகவினருக்கு ‘பேஷன்’.

அதனால்தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட கல்லூரிகளை அதனோடு இணைத்திருக்கிறோம். கருணாநிதி தொடங்கி வைத்த சட்டப்பேரவை வளாகத்தையே அதிமுக ஆட்சியில் மாற்றவில்லையா?

‘ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்றது’ என்று சட்டப்பேரவையில் துரைமுருகன் ஏற்கெனவே குரல் கொடுத்துள்ளார். உயர்கல்வியின் வளர்ச்சியைக் கருதியே இது செய்யப்பட்டுள்ளதே தவிர, பெயருக்காக செய்யப்பட்டது அல்ல.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே நடைபெற்ற ஊழலைவிசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் இது வந்துவிட்டால் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத அளவுக்கு இந்தப் பல்கலைக்கழகம் செயல்படும்.அரசு மருத்துவக் கல்லூரிகளில்வசூலிக்கப்படும் கட்டணமேஅண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிக் குறைவானவர்களாக நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீக்கப்பட்டு, முறையாக சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்படுவர் எனஅறிவித்துள்ளோம். இப்பல்கலைக்கழகத்தில் தேர்வானவர்களுக்கு முறையாக நேர்முகத் தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் அந்தநியமனத்தையும் நிறுத்தி வைத்துள்ளோம். இவையெல்லாம் பட்ஜெட் வரும்போது அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்