டிஎன்பிஎஸ்சிக்கு புதிதாக பாதிரியார் உட்பட 4 உறுப்பினர்கள் நியமனம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது இதன் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி க.பாலசந்திரன் உள்ளார். பி.கிருஷ்ணகுமார், ஏ.வி.பாலுசாமி ஆகிய 2 பேர் மட்டும் உறுப்பினர்களாக உள்ளனர். 12 உறுப்பினர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், தற்போது புதிதாக 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலி கே.ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட அரசாணை:

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக கீழ்க்கண்ட நபர்களை தமிழக ஆளுநர் நியமித்துள்ளார். அவர்கள் விவரம்: ஐஏஎஸ் அதிகாரி எஸ்.முனியநாதன் (தற்போது தொழிலாளர் நலஆணையர்), பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம் (சென்னை பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர்), முனைவர் கே.அருள்மதி (சென்னை), அருட்தந்தை ஏ.ராஜ் மரியசூசை (டான் போஸ்கோ,ஏற்காடு).இவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாதிரியார் ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை. காலியாக உள்ள 8 உறுப்பினர் பதவியும் விரைவில் நிரப்பப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்