கோயில்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்களின் எண்ணிக்கையை கண்டறிந்து விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். கோயில்களில் 5 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களின் விவரம் பெற்று ஒரு மாதத்தில் பணி நிரந்தரம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
இவை தவிர காலியாக உள்ள பணியிடங்களும் கண்டறியப்பட்டு நிரப்பப்படும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.மேலும், சமயபுரம், திருவாரூர்கோயில்களிலும் அமைச்சர்ஆய்வு மேற்கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago