பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நேற்று விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவர் சீனிவாசகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் ஆட்சியில் 108 டாலர் கச்சாஎண்ெணய் விற்றபோது, ரூ.70-க்குபெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கச்சா எண்ெணய் 50 டாலருக்கும் குறைவாக விற்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதன் விலை குறையும்.
மேகேதாட்டு அணை கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கிறது. இதுகுறித்து கர்நாடகா தமிழகத்தின்ஒப்புதலையோ, ஆலோசனையோ பெறவில்லை” என்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்தி செயற்கையான விலை ஏற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனால் அடிப்படை பொருட்களுக்கு விலையேற்றம் ஏற்படும். கலால் வரியை அதிக அளவுக்கு உயர்த்தியதால் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பொருளாதாரம் தெரியாததால் இந்தத் தவறை செய்துள்ளனர் என்றார்.
இதை தொடர்ந்து பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago