வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியீடு :

By செய்திப்பிரிவு

பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா, சமீப நாட்களாக அதிமுக தொண்டர்களிடம் பேசி வரும் ஆடியோ தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், முன்பு அமமுகவுக்கு சென்று மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய அகில உலக எம்ஜிஆர் மன்றதுணைச் செயலாளரும் வேலூர் கிழக்குமாவட்ட முன்னாள் அதிமுக செயலாளருமான எல்.கே.எம்.பி.வாசுவிடம் சசிகலாபேசிய ஆடியோ நேற்று வெளியானது.

அதில் வாசு பேசும்போது, ‘‘பேரறிஞர் அண்ணா அவர்கள் தம்பி வா, தலைமை ஏற்க வா என்று நாவலரைப் பார்த்து அழைத்த மாதிரி, இன்றைய காலகட்டத்துக்கு நீங்கள் வந்தால்தான் அம்மா கண்ட ஆட்சியை கொண்டு வர முடியும். தலைமைக்கு கட்டுப்பட்ட தொண்டர்கள் இப்போது இல்லை. மந்திரியாக இருந்தவர்கள், மாவட்டச் செயலாளர், எம்எல்ஏக்கள் எல்லாம் குறு நில மன்னர்களாக செயல்படுகிறார்கள். தொண்டர்களை மதிப்பதில்லை. மாவட்டச் செயலாளர், மந்திரியாக இருந்தவர்களுக்கு கட்டுப்பட்டு எடப்பாடி செயல்படுகிறார். எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. நீங்கள் வரவேண்டியது காலத்தின் கட்டாயம்” என்று அடுத்தடுத்து கூறுகிறார்.

சசிகலா பேசும்போது, ‘‘கட்சிக்கு தொண்டர்கள்தான் முக்கியம். அதுதான் நம்ம கட்சியோட வழக்கம். நீங்க கவலைப்படாதீங்க. இந்தக் கட்சியை அப்படியே விட்டுவிட மாட்டேன். தொண்டர்களையும் விட்டுவிட மாட்டேன் அம்மா எப்படிகொண்டு வந்தாங்களோ அந்த மாதிரிகட்சியை கொண்டு வரலாம். 30 ஆண்டாக அம்மாவின் கூடவே இருந்துபார்த்திருக்கிறேன். நிச்சயம் செய்வேன். சீக்கிரம் தொண்டர்களை சந்திக்கிறேன்” என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்