நீலகிரி மாவட்டம் உதகையில்,கரோனா தடுப்பு நடவடிக்கைதொடர்பான ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கான மருந்து 30 ஆயிரம் டோஸ் தேவை. மத்திய அரசிடம் கேட்டு, 1,790 டோஸ் பெறப்பட்டுள்ளது. அதை, தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு அளித்து வருகிறோம்.
கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மாற்று மருந்து மற்றும் மாற்று சிகிச்சை முறைகளைக் கண்டறிய 13 மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினரின் அறிக்கை வந்தவுடன் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். சித்தா, ஆயுர்வேதம் ஆகிய இந்திய மருத்துவ முறை சிகிச்சை மையங்கள், கடந்த ஒருமாத காலத்தில் 62 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாணியம்பாடியில் யுனானி சிகிச்சை திறக்கப்பட்டுள்ளது. அலோபதியுடன் சேர்த்து சித்தா, யுனானி உட்பட அனைத்து மருத்துவத்தையும் ஊக்கப்படுத்தும் அரசாக, தமிழக அரசு உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago