புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் நேற்று விராலிமலை, இலுப்பூர் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியது: கிராமப்புற மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு சென்னையில் சிகிச்சை மையம் அமைத்திருப்பதைப் போன்று, மண்டல அளவில் சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும்.
முகக்கவசம் ஆயுதம் என்றால்தடுப்பூசி பேராயுதம். எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago