புதுக்கோட்டை, பெரம்பலூரில் - கருப்பு பூஞ்சை நோய்க்கு 2 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் கருப்பு பூஞ்சைநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(55). இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

பின்னர், இவருக்கு கருப்புபூஞ்சை நோய்க்கான அறிகுறிஇருந்ததால், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன்(62). அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட சுதாதாரத் துறையினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

பெரம்பலூரைச் சேர்ந்த 3 பேர் திருச்சியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளனர். அங்கிருந்து அறிக்கை வந்த பிறகே அவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் இறந்தார்களா என்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு மாவட்ட சுகாதாரத் துறையினர் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்