புதிதாக 33,361 பேருக்கு கரோனா ஒரே நாளில் 474 பேர் உயிரிழப்பு :

தமிழகத்தில் புதிதாக 33,361 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று புதிதாக 18,618 ஆண்கள், 14,743 பெண்கள்என மொத்தம் 33,361 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 4,734 பேர், சென்னையில் 2,779 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்து 78 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டுமே 4 லட்சத்து 93 ஆயிரத்து 881 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 534 பேர் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 16 லட்சத்து 43 ஆயிரத்து 284 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 4,719 பேர்உட்பட தமிழகம் முழுவதும் 30,063பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

உயிரிழப்பு 22,289 ஆனது

சென்னையில் 43,624 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 3.13 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்றுஒரே நாளில் 474 பேர் உயிரிழந்தனர்.

இதன்மூலம், தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,289 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில்மட்டும் அதிகபட்சமாக 6,723 பேர்இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 64 லட்சத்து 02 ஆயிரத்து 773 பேருக்கு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 124 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE