விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் சார் பதிவாளர் சஸ்பென்ட் :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிமூலம் (60). இவர், தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தை பத்திரப்பதிவு செய்ய 2 மாதங்களுக்கு முன்பு கலவை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது, ரூ.20 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என சார் பதிவாளராக இருந்த ரமேஷ் (45) கேட்டுள்ளார்.

முன்பணமாக ரூ.10 ஆயிரம் தொகையை இடைத்தரகர் மூலமாக சார் பதிவாளர் பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர், நிலத்தை பார்வையிட வேண்டும் என்று கூறி ஆய்வு செய்த சார் பதிவாளர் நிலுவையில் உள்ள ரூ.10 ஆயிரம் தொகையை கொடுத்துவிட்டு நிலத்தின் பத்திரத்தை வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்தத்தொகையை இடைத்தரகர் மூலமாக அவர் பெற்றுக்கொள்ளும் செல்போன் வீடியோ காட்சிகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இதுதொடர்பாக வேலூர் சரக பத்திரப்பதிவு டிஐஜி ஜனார்த்தனன் விசாரணை நடத்தியதுடன், பத்திரப்பதிவு ஐஜி சங்கருக்கு அறிக்கையாக அளித்தார். அதன் அடிப்படையில் சார் பதிவாளர் ரமேஷை சஸ்பென்ட் செய்து ஐஜி சங்கர் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்