செஞ்சியில் 20 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

செஞ்சி அருகே ஞானோதயம் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு வளத்தி போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருவண்ணாமலை மாவட்டம், சேத்துபட்டு பகுதியில் இருந்து செஞ்சி நோக்கி வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட டாராஸ் லாரி ஒன்றை போலீஸார் நிறுத்தி, சோதனை மேற்கொண்டனர்.

அந்த லாரிக்குள் அட்டைப் பெட்டிகளில் எரி சாராய கேன்கள் மறைத்து கடத்திவரப்பட்டது தெரியவந்தது. 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 573 கேன்கள் இருந்தன. இதில், 20 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் இருந்தது. இதையடுத்து, எரி சாராயத்துடன் கூடிய டாராஸ் லாரியை போலீஸார் பறிமுதல்செய்தனர்.

தொடர்ந்து, லாரியை ஓட்டி வந்த மத்தியபிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகித் ராம் என்பவரிடம் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் போலீஸார் விசாரனை நடத்தினர். விசாரணையில், அந்த எரி சாராயம், குஜராத் மாநிலத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதிக்கு கடத்தி கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் மற்றும் லாரியின் மதிப்பு ரூ.77 லட்சத்து 33 ஆயிரம் எனமதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து லாரி டிரைவர் மோகித்ராமை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்