சீமான் தந்தை செந்தமிழன் காலமானார் : இளையான்குடி அருகே இன்று உடல் அடக்கம்

By செய்திப்பிரிவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை நேற்று பிற்பகல் காலமானார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செபஸ்தியான் (எ) செந்தமிழன் (90). இவர் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரில் வசித்து வந்தார். விவசாயியான இவர் வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு அவர் காலமானார். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. செபஸ்தியானுக்கு அன்னம்மாள் (76) என்ற மனைவியும், மரியநாயகம், சீமான், இளையதம்பி ஆகிய 3 மகன்களும், அருளாயி, அன்பரசி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

முதல்வர் இரங்கல்

சீமான் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சீமானின் தந்தையார் செந்தமிழன் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமானுக்கும், அவரது குடு்ம்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்