கரோனா தடுப்பூசி இருப்பு விவரத்தை வாட்ஸ்அப் மூலம் அறிந்து கொள்ளலாம் :

By எஸ்.நீலவண்ணன்

கரோனா தடுப்பூசி இருப்பு விவரத்தை வாட்ஸ்அப் மூலம் அறிந்து கொள்ளலாம் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த ஜன.16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்ஸின்’ என 2 வகையான தடுப்பூசிகள் அவரவர் விருப்பத்தின் பேரில் போடப்பட்டுகிறது.

‘கோவாக்ஸின்’முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 2- வது டோஸை 28 நாட்களுக்குப் பிறகும், ‘கோவிஷீல்டு’ போட்டுக்கொள்பவர்கள் 45 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸையும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி மையம், தேதி மற்றும் நேரத்தை எந்த மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, ஹரியானாவில் இருந்தபடி பதிவு செய்த ஒருவர் கேரளாவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இதற்கு பயனாளி முதலில் ‘cowin.gov.in’ இணையத்தில் உள்நுழைந்து மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். ஓடிபி மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். ஒடிபி சரிபார்க்கப்பட்டவுடன், தடுப்பூசி நேரத்தில் அவர் காட்ட விரும்பும் புகைப்பட ஐடி, புகைப்பட அடையாள எண் (உதாரணமாக ஆதார் எண்), வயது மற்றும் பாலினம் மற்றும் பயனாளி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா உள்ளிட்ட 4 விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

அதன்பின் தடுப்பூசி மையத்தைபயனாளி தேர்ந்தெடுத்தவுடன், ஒரு குறிப்பிட்ட நாளில் கிடைக்கும் தேதி மற்றும் இடங்களின் எண்ணிக்கையைக் கணினி காண்பிக்கும். பொதுமக்கள், தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள மருத்துவமனையில் எந்த வயதினருக்கும் எப்போதும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தடுப்பூசி எவ்வளவு இருப்பு உள்ளது. எத்தனை நாட்களுக்கு உள்ளது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள, நீங்கள் வசிக்கும் பகுதியின் பின்கோட் எண்ணை வாட்ஸ்அப்பில் 9013151515 என்ற எண்ணுக்கு அனுப்பினால், உங்கள் அருகே உள்ள மையங்கள் மற்றும் எந்தெந்த தேதியில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசி போடப்படும் விவரங்கள் அனுப்பப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தாங்களாகவே முன்பதிவு செய்துகொள்ளும் வகையில் https;//selfregistration.cowin.gov.in/ என்ற இணையதளமும் இயங்கி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்