விருதுநகரில் நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. அதோடு, நேற்று ஒரே நாளில் பெண் செவிலியர், மருத்துவப் பணியாளர்கள், ரயில்வே காவலர் உள்ளிட 119 பேருக்கு கரோனா தொற்று கண்டறிப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வந்த கனிமுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, ஏட்டு கனிமுத்து இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற காவலர்கள் மற்றும் குடும்பத்தினர் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாவட்டக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், துக்க நிகழ்ச்சிக்குச் சென்று வந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதோடு, விருதுநகர் மாவட்டத்தில் நேற்று அருப்புக்கோட் டையில் உள்ள பெண் செவிலியர், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்கள் 4 பேர், விருதுநகர் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதோடு, நேற்று ஒரே நாளில் 119 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago