தேனி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று கடந்த 2 வாரங்களாக அதிக அளவில் பரவி வருகிறது. டீ கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் உள்ள டீ கடைகளில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதது கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், கரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து டீ கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும்வரை இது நடைமுறையில் இருக்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago