திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படை வீரர்கள் 2 பேருக்கு கரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் திண்டுக்கல் அருகேயுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு துணை ராணுவப் படையினர், ஆயுதப்படை போலீஸார், உள்ளூர் போலீஸார் என 3அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன்பு சுழற்சிமுறையில் 72 துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் கேரளா மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த துணை ராணுவப்படை வீரர்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago