பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்ளது. கோயிலை சுற்றியுள்ள 14 கி.மீ தொலைவுக்கு பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்வது இங்கு சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் கிரிவலம் செல்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். குறிப்பாக, சித்ரா பவுர்ணமி தினத்தில் மட்டும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் பிரசித்திப் பெற்ற சித்ரா பவுர்ணமி தினம் வரும் 26-ம் தேதி (திங்கள்கிழமை) பகல் 12.16 மணிக்கு தொடங்கி 27-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.59 மணிக்கு முடிகிறது.
இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago