தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் - கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் :

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் பலரும் தயக்கம் காட்டி வந்தனர். தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் அரசு மற்றும் தனியார் கரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெறவில்லை. இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்தோஷ்குமாரிடம் கேட்டபோது, ‘‘கரூர் மாவட்டத்தில் இதுவரை 47,000பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3.27 லட்சம் பேர் உள்ள நிலையில், இவர்களில் 8 சதவீதம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது தடுப்பூசி இருப்பு இல்லாததால் மாவட்டத்தில் உள்ள 45 மையங்களில் இன்று(நேற்று) தடுப்பூசி போடப்படவில்லை. அடுத்த வாரம் தடுப்பூசிகள் வந்தபிறகு, மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE