கூடங்குளத்தில் ரஷ்ய விஞ்ஞானி உட்பட 13 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகரில் 93 பேருக்கும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 81 பேருக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பான அணுவிஜய் நகரியத்தில், ரஷ்ய விஞ்ஞானி உட்பட 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அணுவிஜய் நகரியத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் குடியிருப்புப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய விஞ்ஞானிகள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

மேலும் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை பிரிவில் 6 காவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் களக்காடு தலையணை சுற்றுலாத் தலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்