கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயிலில், சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராமர் சிலையை, ஆதிசேஷன் சிலை (7 தலை பாம்பு) மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்கும் பணி தொடங்கியது.
இதற்காக வந்தவாசி கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் இருந்து 2018-ல் சுவாமி சிலை செய்வதற்கான 380 டன் கற்பாறை பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ஆதிசேஷன் சிலை செய்வதற்கான 230 டன் கற்பாறை, 128 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் பெரும் முயற்சிக்கு பின்பு ஏற்றப்பட்டு, நேற்று முன்தினம் மாலை எடுத்துச் செல்லப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago