மேகேதாட்டுவில் அணை கட்டும் பணியை விரைவுபடுத்தியுள்ள கர்நாடக அரசு : நேரில் பார்வையிட்ட பி.ஆர்.பாண்டியன் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழக காவிரி விவசாயிகள் சங்கபொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஆத்தூர் பெருமாள், மணிக்கொல்லை ராமச்சந்திரன், ராசிபுரம் கதா தர்மலிங்கம், சமூக ஆர்வலர்கள் கிருஷ்ணகிரி நடராஜ், அனுமந்தப்பா, உச்சப்பா ஆகியோர் நேற்றுகர்நாடக மாநிலம் மேகேதாட்டு பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

அதன்பின் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மேகேதாட்டில் 67 டிஎம்சி தண்ணீரைத் தேக்கும் வகையில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. இதற்காக கருங்கற்கள், மணலைஅங்கு கொட்டி வைத்துள்ளனர்.

எனவே, தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் அனைவரும் ஒன்றுபட்டு, இந்த பணியை தடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு கொண்டு வந்து, அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் உடனே இதில் தலையிட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்