நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல, அமைச்சர் கே.பாண்டியராஜனின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இது தனது தங்கையின் போராட்டத்தையும், இறப்பையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதால், அமைச்சர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் எஸ்.பி.யிடம் அனிதாவின் சகோதரர் நேற்று புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட எனது சகோதரி அனிதா பேசுவதுபோல சித்தரித்து அமைச்சரும், அதிமுகவேட்பாளருமான கே.பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ அனிதாவின் போராட்டத்தையும், இறப்பையும் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. அவர் சார்ந்த கட்சியின் வெற்றி வாய்ப்புக்காக எங்கள் குடும்பத்தினரின் சம்மதம் இன்றி,அனிதா படம் மற்றும் வீடியோவை பயன்படுத்தியது குற்றமாகும்.
வாக்காளர்களை ஏமாற்றும் மோசடி செயலில் ஈடுபட்டுள்ள பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். வேட்பாளரை தகுதி நீக்கம்செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, அமைச்சர் பாண்டியராஜன் தனது ட்விட்டரில் இருந்து அந்த வீடியோவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago