தமிழ்நாடு மக்கள்நலப் பணியாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். அவர் கூறியபோது, ‘‘1990-ல் திமுக அரசு 25,000 மக்கள்நலப் பணியாளர்களை நியமித்தது. அவர்களை அதிமுக அரசு 3 முறை பணி நீக்கம்செய்தது. அதனால் பலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் வறுமை, நோயில் இறந்துவிட்டனர். திமுக ஆட்சிக்குவந்ததும் மீண்டும் மக்கள்நலப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர் என ஸ்டாலின்அறிவித்துள்ளார். அதனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர 234 தொகுதிகளிலும் மக்கள்நலப் பணியாளர்கள் பணியாற்றுகிறோம் என்றார். மாநில நிர்வாகிகள் பி.டி.ராஜா, காந்தி, முத்துகிருஷ்ணன் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago