கடவுள் மறுப்புக் கொள்கை பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் வேல் ஏந்தியது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் சி.சரஸ்வதியை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால், திமுக – காங்கிரஸ்கூட்டணி அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்காக போட்டியிடுகின்றன. இதனால்தான் இந்த இரு கட்சிகளையும் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்த தேர்தலிலும் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல்,குடும்ப அரசியல், கட்டப் பஞ்சாயத்து அதிகரிக்கும். திமுகவைப் புறக்கணிக்க இது சரியான நேரமாகும். திமுகவின் முன்னணி தலைவர்கள் பெண்களுக்கு எதிராகவும், ஆதிதிராவிடர்களுக்கு எதிராகவும் பேசுகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளனர். அவர்கள் விரக்தியின் உச்சிக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
பாஜகவின் வேல் யாத்திரைக்குப் பின்னர், கடவுள் மறுப்பு கொள்கை பேசிய ஸ்டாலின், கையில் வேல் பிடித்து பிரச்சாரம் செய்கிறார். இது தமிழக பாஜகவுக்கு கிடைத்த வெற்றி.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார். தமிழகத்தில் ரூ.7 லட்சம் கோடியில் அமையஉள்ள ராணுவ தளவாட உற்பத்தி மையம் மூலம், சென்னை, கோவை,ஓசூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago