விழுப்புரத்தில் கடந்த 23-ம் தேதிஅமமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசினார். அதில் பேசும்போது “பழனிசாமி கம்பெனி காந்திநோட்டை நம்பியே தேர்தலில்நிற்கிறது. இந்தத் தொகுதியில்ரூ.200 கோடியை பதுக்கி வைத்துள்ளனர். இது யாருடைய பணம்? எல்லாம் மக்களின் வரிப்பணம். பணம் உங்களை தேடி வரும். அதை வாங்கிக்கொண்டு கதையை முடித்து விடுங்கள்’’ என்று பேசினார்.
இதில் டிடிவி தினகரன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை இழிவாக பேசியதாக சென்னை, கீழ்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாபு முருகவேல் விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இப்புகாரின் பேரில் போலீஸார்டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago