தமிழகத்தில் பாஜக தோல்வியடையும் : காங்கயம் தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பாஜக முழுமையாக தோல்வியடையும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித் தார்.

திமுக வேட்பாளர்கள் மு.பெ.சாமிநாதன் (காங்கயம்), கயல்விழி செல்வராஜ் (தாராபுரம்), பல் லடம் தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர் முத்துரத்தினம் (மதிமுக) ஆகியோரை ஆதரித்து, திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தோல்வி பயத்தில் வாய்க்கு வந்தபடி முதல்வர் பழனிசாமி பேசுகிறார். திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை லட்சோபலட்சம் ஸ்டாலின்கள் இருக்கிறார்கள். திமுகவை அழிக்க உங்கள் உயிர் வேண்டாம். திமுக ஆட்சியை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்.

கருத்துக்கணிப்பு சாதக, பாதங்கள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், நம் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கருணாநிதி கூறுவார். வாக்குச்சாவடியில் கடைசி வாக்கு விழும் வரை கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் எப்படி குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக வெற்றி பெறாது. மாறாக, முழுமையாக தோல்வியடையும். அதிமுகவும் தோல்வியைத் தழுவ வேண்டும். அவர்கள் ஓரிடத்தில் வென்றால்கூட, அதிமுக எம்எல்ஏவாக இல்லாமல் பாஜக எம்எல்ஏவாகத்தான் இருப்பார்கள். இதற்கு, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தனது லெட்டர்பேடில் மோடியின் படத்தை பெரிதாக போட்டுள்ளார் என்பதே உதாரணம். இவ்வாறு அவர் பேசினார்.

கோபியில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஈரோடு மாவட்டம் கோபியில் கோபி, பவானி, அந்தியூர் திமுக வேட்பாளர்கள் மற்றும் பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரத்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

பள்ளிக்கல்வித் துறை அமைச்ச ரான செங்கோட்டையனிடம், ஒரு காலத்தில் முதல்வர் பழனிசாமி கைகட்டி நின்றார். இன்று பழனி சாமியிடம் செங்கோட்டையன் கை கட்டி நிற்கிறார். கடந்த காலத்தில் கை கட்டி நிற்க வைத்ததற்காக, செங்கோட்டையனை முதல்வர் பழனிசாமி பழிவாங்கி வருகிறார். எப்படியென்றால் 10-ம் வகுப்புத் தேர்வு நடக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அடுத்த நாள் தேர்வு ரத்துஎன முதல்வர் அறிவித்தார். கரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாது என செங்கோட்டையன் அறிவித்தார். அடுத்த நாளே பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளே அமைச்சர் செங்கோட்டையனுக்கு மதிப்பு, மரியாதை கொடுப்பது கிடையாது. தன் துறையில் எதுவும் உருப்படியாக செய்யாத அமைச் சராக செங்கோட்டையன் விளங்குகிறார். தனது கல்வித் துறையில் மட்டுமல்லாது, இந்த தொகுதிக்கும் செங்கோட்டையன் எதுவும் செய்யவில்லை என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்