வடலூர் அருகே 5.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

வடலூர் அருகே ஆவணங்கள் இன்றி வேனில் எடுத்து செல்லப்பட்ட 5.5 கிலோ நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கீராப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா தலைமையில் காவல் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர் அடங்கிய பறக்கும் படையினர் நேற்று வடலூர் அருகே சென்னை - கும்பகோணம் சாலையில் ஆபத்தாணபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற மூடப்பட்ட மினிவேனை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வேனில் 2 இரும்பு பெட்டிகளில் 5.5 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லை.

பறக்கும் படையினர் அந்த நகைகளை பறிமுதல் செய்து, குறிஞ்சிப்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வக்குமாரிடம் ஒப்படைத்தனர். அந்த நகைகள்சென்னையில் இருந்து கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில் உள்ள பிரபல நகைகடைக்கு எடுத்து செல்லப்படுவதாக கூறப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்