திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் இன்றுநடைபெறுகிறது. இதையொட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சைவ சமயத்தின் தலைமை பீடம் என அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று(மார்ச் 25) நடைபெறுகிறது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்ற சிறப்பு வாய்ந்த ஆழித் தேர், 96 அடி உயரமும் 400 டன் எடையும் உடையது.தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்றுமாலை 7 மணியளவில் தியாகராஜ சுவாமி அஜபா நடனம் ஆடி, ஆழித் தேரிலும், விநாயகர், அம்பாள்,சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் சிறிய தேர்களிலும் எழுந்தருளினர். தொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணிக்கு சிறிய தேர்களின் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், காலை7.30 மணிக்கு ஆழித் தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்று பரவல்மீண்டும் அதிகரிக்க தொடங்கிஉள்ளதால், 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்றுஉள்ளவர்களும் தேரோட்ட விழாவுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago