கும்பகோணம் அரசுப் பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு :

கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஏற்கெனவே 6 மாணவிகள், ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருந்த நிலையில், மேலும் 25 மாணவிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று உறுதியானது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள11 பள்ளிகள், 2 கல்லூரிகள், ஒரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படிக்கும் மாணவ - மாணவியர், ஆசிரியர்கள், வேன் ஓட்டுநர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என சுமார் 150 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில், நேற்று முன்தினம் மாலை வரை 66 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒரு ஆசிரியர் மற்றும் 6 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு படிக்கும் 1,200 மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவுகள் நேற்று வெளியானதில், மேலும் 25 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்