திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து நடக்கும் - யார் வர வேண்டும் என மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் : கள்ளக்குறிச்சி பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்துதான் நடக்கும். யார் வர வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்த்து, மக்கள் வாக்களிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

அதிமுக வேட்பாளர் செந்தில் குமாருக்கு வாக்கு சேகரிப்பதற் காக நேற்று கள்ளக்குறிச்சி வந்திருந்த முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

எனது குடும்பத்தில் பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகி றோம். ஆனால், என்னைப் பார்த்துஸ்டாலின் ‘போலி விவசாயி’ என்கிறார். விவசாயிகளில் ‘போலி விவசாயி’ என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதன் மூலம்விவசாயிகளை கொச்சைப்படுத்து கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் உள்ளாட்சித் துறைஅமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தவர். இவர் பதவியில் இருந்தபோது ஏதும் செய்யவில்லை. ஆனால் தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சரைப் பற்றி அவதூறாகப் பேசி வருகிறார். இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் உள்ளாட்சித் துறைதமிழக உள்ளாட்சித் துறை. மத்திய அரசிடம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளாட்சித் துறையில் ஊழல், நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் என எதற்கெடுத்தாலும் வாய்க்கு வந்தபடி ‘ஊழல் ஊழல்’ என பேசி வருகிறார்.

திமுகதான் ஊழல் கட்சி. ஊழலின் பிறப்பிடமே அங்குதான்உள்ளது. பச்சை பொய் சொல்லும்ஸ்டாலின் எப்படியாவது இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஆட்சிக்கு வரத் துடிக்கிறார். திமுகஎன்றாலே ‘ரவுடி கட்சி, அராஜகக்கட்சி’ என்று பெயர். அவர்கள்ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துதான் நடக்கும். ஸ்டாலின் கட்டப் பஞ்சாயத்துதலைவர். ஆட்சியில் அவர்கள் அமரப் போவதில்லை. ஆனால் அவர்கள் இப்போதே காவல் துறையினரை மிரட்டி வருகின்றனர். காவல்துறையின் சட்டப்படியான பணிகளை செய்து வருகின்றனர். இவர்களை ஆட்சியில் அமர விடலாமா? இவர் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? எனவே சிந்தித்து வாக்களியுங்கள் என்றார்.

தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகண்டை கூட்டு ரோடு,உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் செந்தில்குமார், எஸ்.கே.டி.சந்தோஷ், குமரகுரு, கூட்டணிக் கட்சி பாமக வேட்பாளர் ஜி.ராஜாஆகியோரை ஆதரித்து முதல்வர்பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்