என்எல்சி தொழிற்சங்க தேர்தலில் தொமுச வெற்றி :

By செய்திப்பிரிவு

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கான அங்கீகரிக்கப் பட்ட தொழிற்சங்கத்துக்கான தேர்தல் முடிவில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இங்கு நிரந்தர தொழிலாளர்கள் சுமார்7 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுஉள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பெற நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் பெற்றுத் தரும். அங்கீகார தொழிற்சங்கத்துக்கான தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதில் 51 சதவீத வாக்குகளை பெறும் தொழிற்சங்கம் வெற்றி பெற்ற தொழிற்சங்கமாக அறிவிக்கப்படும்.

அங்கீகார தொழிற் சங்கங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. அதில் தொமுச, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், சிஐடியூ, பாட்டாளி தொழிற்சங்கம் உட்பட 7 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என ஒரு தொழிற்சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை தள்ளிப்போனது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று முன்தினம் நெய்வேலி வட்டம் 10 என்எல்சி மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தொழிற்சங்க உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணிநடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் என்எல்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் - 2,352 வாக்குகள், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம்- 1,697 வாக்குகள், சிஐடியூ- 1,203 வாக்குகள், பாட்டாளித் தொழிற் சங்கம் - 925 வாக்குகள், பிஎம்எஸ் - 208 வாக்குகள், எச்எம்எஸ் -365 வாக்குகள், எல்எல்எப்- 336 வாக்குகள் பெற்றன இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அதிக வாக்குகள் பெற்று முதன்மை சங்கமாக வெற்றி பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்