விருதுநகர் அருகே மத்தாப்பு தீக்குச்சி தயாரிப்பு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒருவர்உயிரிழந்தார். 3 பேர் காய மடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஆமத் தூர் அருகே குருமூர்த்திநாயக்கன் பட்டியில் விசாக்(28) என்பவருக்குச் சொந்தமான மத்தாப்பூ தீக்குச்சிதயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. நேற்று மாலை மத்தாப்பு காயவைக்கும் அறையில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.
அப்போது, அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வீராசாமி, புதுராஜன், நடராஜன், பஞ்சவர்ணம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். நான்கு பேரும் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் புதுராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீராசாமி, நடராஜன் 80 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் தீயணைப்புத் துறை யினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago