கள்ளக்குறிச்சியில் - ரூ.1.70 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.1 கோடியே 70 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்திருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை அரசியல் கட்சியினர் கையாண்டு வருவதால், அதை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல்வேறுநடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறவழிச் சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மார்க்கத்தில் இருந்து கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை வழியாக உளுந்தூர்பேட்டை மார்க்கமாக சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.1 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்துள்ளது.

இதுகுறித்து வாகனத்தில் வந்தவரிடம் விசாரித்தபோது உரிய ஆவணங்கள் இல்லாததது தெரியவந்துள்ளது. அவர்கள் ஏடிஎம்மில் வைப்பதற்காக அந்தப் பணத்தை எடுத்துச் சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்துடன் வாகனத்தை பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

வாகனத்தில் வந்தவரிடம் விசாரித்தபோது உரிய ஆவணங்கள் இல்லாததது தெரியவந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்