திருச்சியில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய : மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது :

By செய்திப்பிரிவு

திருச்சி திருவானைக்காவலைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மின் இணைப்பை 5 எச்.பி.யில் இருந்து 15 எச்.பி அளவுக்கு உயர்த்தித் தருமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக திருவானைக்காவல் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர்.

அந்த மனு மீது பல நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அந்நிறுவனத்தினர் இதுகுறித்து திருவானைக்காவல் மின் உதவிப் பொறியாளர் ராஜேந்திரனிடம் விசாரித்தபோது, ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மின் அளவை உயர்த்திக் கொடுக்க முடியும் எனக் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத தனியார் நிறுவனத்தினர், இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (லஞ்ச ஒழிப்பு) போலீஸில் புகார் அளித்தனர். பின்னர் போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.30 ஆயிரத்தை நேற்று திருவானைக்காவல் உதவிப் பொறியாளர் ராஜேந்திரனிடம் அந்நிறுவனத்தினர் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்டபோது லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன், சக்திவேல், அருள்ஜோதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ராஜேந்திரனை பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்