முதல்வர் பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாகப் பேசியதாக அரசு வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், ஸ்டாலினை ஏப்.9-ம் தேதி நேரில்ஆஜராக சிவகங்கை மாவட்டஅமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
சிவகங்கை மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் ராமநாதன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதியோடு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறிஇருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் கடந்த பிப்.8-ம் தேதி திமுக சார்பில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி மற்றும்தமிழக அரசை பற்றி மு.க.ஸ்டாலின் அவதூறாகப் பேசினார்.
ஏற்கெனவே முதல்வரைப் பற்றி மு.க.ஸ்டாலின் அவதூறாகப் பேசக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை ஸ்டாலின் மீறியுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை நேற்று விசாரித்தமாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, ஏப்.9-ம் தேதி மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago