கற்போம், எழுதுவோம் கல்வி திட்டத்தில் எழுத்தறிவு தேர்வு எழுதுவதற்கு100% வருகைப்பதிவு கட்டாயம்

By செய்திப்பிரிவு

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் "கற்போம், எழுது வோம் இயக்கம்" திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு மே முதல் 15,823 கற்போர் எழுத்தறிவு மையங்களில் தன்னார்வ ஆசிரியர்களின் உதவியுடன் கற்றல்-கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 120 மணி நேரம் பயிற்சி பெற்று இறுதி மதிப்பீட்டு தேர்வுக்கு தகுதி பெறுவர்.

எனினும், தமிழ்நாடு எமிஸ் செயலியில் மாவட்டத்தில் மைய அளவில் அந்தந்த தன்னார்வ ஆசிரியர்களால் பதிவேற்றப்பட்ட கற்றல் செயல்பாடுகள் மற்றும் வருகைப்பதிவை ஆய்வுசெய்த போது பெரும்பாலான மாவட்டங்களில் வருகைப்பதிவு 50 சதவீதத்துக்கும் கீழ் இருந்தது கண்டறியப் பட்டது. அனைத்து கற்போரும் 100 சதவீதம் வருகை புரிந்து 120 மணி நேர கற்றல் பயிற்சியை முடித்து வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணக்கீடு ஆகிய அடைவுகளை பெற்றிருக்க வேண்டும்.

இத்தகைய கற்போருக்கு மார்ச் 27-ம் தேதி முதல்கட்ட அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்படும். எனவே, 120 மணி நேர கற்றல் பயிற்சி முடிக்காதோருக்கு மார்ச் 26 வரை தொடர் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்