சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் 4-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிமாக இருக்கும்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 71 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு இல்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago