நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை முதல்நிலை தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) சார்பில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜேஇஇ தேர்வு 4 முறை நடத்தப்படும் என்று என்டிஏ அறிவித்தது. அதன்படி, முதல்கட்ட ஜேஇஇ முதல்நிலை தேர்வு கடந்த பிப்.23முதல் 26-ம் தேதி வரை நடத்தப்பட்டது. முதல்முறையாக ஆங்கிலம், இந்தி, தமிழ் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
முதல்நிலை தேர்வு எழுத 6 லட்சத்து 61,776 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 2 தாள்களையும் சேர்த்து 88 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேஇஇ முதல்நிலை தேர்வுமார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அடுத்தடுத்து நடைபெறும். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப தேர்வை எழுதிக் கொள்ளலாம். அதில் அவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago