அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் கருத்து

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படப் போவது உறுதி. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜககூட்டணி படுதோல்வி அடையும்.

கரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு பட்ஜெட்டில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை 34.5 சதவீதம் குறைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் மிக மோசமாக உள்ளது. கடந்த ஆண்டில் ஒரு நபருக்கு சராசரியாக 45 நாட்கள் மட்டுமே வேலை அளிக்கப்பட்டுள்ளது. சராசரி ஊதியமாகரூ.191 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நாடு தற்போதுள்ள நிலையில், அரசியல்ரீதியான மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து திமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். தேர்தல் பிரச்சாரத்துக்காகடெல்லியிலிருந்து தமிழகத்துக்குவரக்கூடிய பாஜக தலைவர்கள்வெறுப்பின் தூதுவர்களாக செயல்படுகின்றனர். பன்முகத்தன்மை வாய்ந்த இந்நாட்டை ஒருமுகத்தன்மை கொண்டதாக மாற்ற முயற்சிக்கின்றனர். மக்களின் கலாச்சாரம், ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

கச்சா எரிபொருள் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையிலும், பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீது நிர்ணயிக்கப்படும் வரிகளே இந்த விலை உயர்வுக்கு காரணம். இது ஒரு பிக்பாக்கெட் அரசு. இதை எதிர்த்து நிச்சயம் போராடுவோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்