சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி நேற்று தாக்கல் செய்த சட்டத் திருத்த மசோதாவில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவை உறுப்பினர் தனதுபதவிக் காலத்தில் இறந்தால் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும் படித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும். சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், உறுப்பினர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12,500 ஆகவும் அதிகரிக்கப்படும். இந்த பணப் பயன்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும். சட்டப்பேரவை உறுப்பினர், பேரவைமுன்னாள் உறுப்பினர்கள், சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினர்கள் மாநில அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கழகத்தின் குளிரூட்டப்பட்ட பேருந்தில் அவரின் வாழ்க்கைத் துணை அல்லது உடனிருப்பவருடன் பயணம் செய்யும்போது அப்பேருந்தில் உறுப்பினருக்கு ஒரு படுக்கை வசதியும், வாழ்க்கைத் துணை அல்லது உடனிருப்பவருக்கு ஒரு இருக்கை வசதியும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர் வங்கிகளில் கடன் பெறும்போது அடமானப் பத்திரங்களை பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு நேரில் சென்று வழங்குவதற்கு பதிலாக இணைய வழியில்பதிவு செய்வதற்காக, வணிக வரி அமைச்சர் கே.சி.வீரமணி கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago