புதுக்கோட்டை ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த சண்முகநாதன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தொடக்கப் பள்ளி ஆசிரியராக 1992-ல் நியமிக்கப்பட்டேன். 2003 ஜூன் மாதத்தில் பதவி உயர்வுக்கான தகுதி பெற்றேன். ஆண்டுதோறும் பொது இடமாறுதல் கலந்தாய்வும், பின்னர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடைபெறும். இந்த ஆண்டு பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் பிப்.18-ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்றும் (பிப்.27), நாளையும் (பிப். 28) பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.
பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தினால் பணியிட மாறுதல் பெறும் ஆசிரியர்களின் உரிமை பாதிக்கப்படும்.எனவே, பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தொடக்கக் கல்வி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்குநீதிபதி தள்ளி வைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago