பெங்களூரு மோசடி கும்பல் சொத்து விவரம் சேகரிப்பு கர்நாடகா பதிவுத்துறைக்கு சிபிசிஐடி கடிதம்

By செய்திப்பிரிவு

பெங்களூருவைச் சேர்ந்த மகாதேவய்யா, அவரது மகன் அங்கித் மற்றும் இடைத்தரகர் ஓம் ஆகிய மூவரை சிபிசிஐடி போலீஸார் கடந்த 9-ம் தேதி கைதுசெய்தனர். கைதான 3 பேரையும் 6 நாள் காவலில் எடுத்து விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன.

மூவரையும் பெங்களூரு, மைசூர், ஓசூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் மகாதே வய்யா, தனது மனைவி சுனந்தா பெயரில் சுமார் 6 கோடி மதிப்பில் செயற்கை அருவியுடன் கூடிய இரண்டு சொகுசு பங்களாங்களும் 3 சொகுசுக் கார்கள் மற்றும் மைசூரில் பல ஏக்கரில் தோப்புக்கள் வாங்கியிருப்பது தெரியவந்தது.

இதேபோல், கைதான ஓம்பெயரிலும் அடுக்குமாடி குடியிருப்புகள், கோடிக்கணக்கானசொத்துக்கள் இருப்பதையும் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த மோசடி கும்பலின்சொத்துக்களை முடக்குவதற்காக அவர்கள் பெயரில் உள்ளசொத்துப்பட்டியலை கேட்டு கர்நாடக மாநில பதிவுத்துறை அலுவலகத்துக்கு சிபிசிஐடி போலீஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும் விசாரணையில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பு விவாகரத்தில் ராமர் பிள்ளை ஏமாந்துள்ளாரா என்பது குறித்து அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே காவலில் எடுக்கப்பட்ட 6 நாட்களில் மோசடி கும்பலுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்