கேரள மாநிலம் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் போலீஸார் என்னை கைதுசெய்துள்ளனர். எனக்கு ஜாமீன்வழங்க வேண்டும். விசாரணைக்குஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில், நீட் ஆள் மாறாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கிருஷ்ணாசிங் உள்ளிட்ட 2 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி கூறும்போது, தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளை எப்போது கைது செய்வீர்கள்? மனுதாரரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்கள், ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago