கன்னியாகுமரியில் மார்ச் 1-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, கடலுக்குள் விசைப்படகில் சென்று மீனவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைந்ததால், சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால், தேசிய தலைவர்களின் பார்வைகன்னியாகுமரி பக்கம் திரும்பிஉள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளும் தற்போது காங்கிரஸ், திமுக கூட்டணி வசமே உள்ளன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும்காங்கிரஸ் வசம் இருந்தது. இடைத்தேர்தலில் வெற்றிபெற்று இத்தொகுதியைத் தக்க வைக்க காங்கிரஸ் வியூகம் அமைத்து பணியாற்றி வருகிறது.
அதேபோல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை கடந்தமுறைபோல் கோட்டைவிட்டுவிடக்கூடாது என, பாஜகவும் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 27, 28-ம் தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும், மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும் பிரச்சாரம் செய்யஉள்ளார். நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை என,அனைத்து பகுதிகளிலும் மக்களைச் சந்திக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் வாக்குவங்கியாக உள்ள மீனவர்களின் ஆதரவைப் பெறும் வகையில், தேங்காய்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்குள் சென்று, படகில்வைத்து மீனவர்களுடன் ராகுல் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago