எல்ஐசி பீமா ஜ்யோதி புதிய திட்டம் அறிமுகம்

By செய்திப்பிரிவு

இந்திய ஆயுள் காப்பீடு கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எல்ஐசி பீமா ஜ்யோதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தனிநபர், சேமிப்பு திட்டமாகும். பாலிசி முதிர்வின் போதோ, பாலிசிதாரர் எதிர் பாராத விதமாக இறக்க நேரிட்டாலோ அதிக தொகை இத்திட்டம் மூலம் உறுதியாக கிடைக்கும்.

இந்த காப்பீடு திட்டத்தை ஏஜென்ட்கள் மூலமும், www.licindia.in இணையதளம் மூலம் நேரடியாகவும் பெற முடியும். ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் ஆயிரத்துக்கு ரூ.50 அடிப்படை தொகை பாலிசியில் சேர்க்கப்படும்.

குறைந்தபட்ச அடிப்படை தொகைரூ.1 லட்சம். அதிகபட்ச வரம்பு இல்லை.பாலிசி 15 முதல்20 ஆண்டுகளுக்கு எடுக்கலாம். பாலிசிதாரராக 3 மாத குழந்தைமுதல் 60 வயது வரை உள்ளவர்கள் சேர முடியும்.

பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாதாந்திர தவணைகளிலோ ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வகையிலோ செலுத்தலாம். இதில் கடன் பெறும் வசதியும் உண்டு. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. l

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்