ராஜினாமா செய்த புதுச்சேரி எம்எல்ஏ க.வெங்கடேசன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “புதுச்சேரி, தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் க.வெங்கடேசன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், பிப். 22-ம்தேதி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமாசெய்தார். இதனால் காங்கிரஸ் அரசுக்கான நெருக்கடி மேலும் அதிகரித்தது.
காங். எம்எல்ஏ நீக்கம்
இதற்கிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தனது எம்எல்ஏபதவியை ராஜினாமா செய்துள்ள லட்சுமி நாராயணனை காங்கிரஸ்கட்சியின் அடிப்படை உறுப்பினர்பதவியில் இருந்து நீக்குவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர்ஏ.வி. சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago