புதுக்கோட்டை அருகேமஞ்சுவிரட்டில் 2 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் செம்முனீஸ்வரர் கோயில் திடலில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அதில், 750 காளைகள் கலந்து கொண்டன. 250மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். இதில் காளைகள் முட்டி,காரைக்குடியைச் சேர்ந்த அன்சாரி(27), கல்லூரைச் சேர்ந்த ராசு(55) உட்பட 56 பேர் காயம் அடைந்தனர்.

இதில், அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அன்சாரியும், மருத்துவமனையில் ராசுவும் உயிரிழந்தனர். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கல்லூர் மஞ்சுவிரட்டில் 2 பேர் உயிரிழக்க, முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாததே காரணம் என பார்வையாளர்கள் குற்றம் சாட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்